சிம் வாங்க விதிமுறைகள் கடுமையாகிறது!
டெல்லி:
தீவிரவாதிகள் கையில் செல்போன்கள் பெருமளவில் புழங்குவதைத் தடுக்கவும், செல்போன் குண்டுகள் என்ற புதிய கலாச்சாரம் பெருகி வருவதைத் தடுத்து நிறுத்தவும், சிம் கார்டுகள் விற்பனைக்கு பெரும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிலீசித்து வருகிறது.
சமீப காலமாக இந்தியாவில் நடைபெறும் தீவிரவாதத் தாக்குதல்களில் செல்போன் குண்டுகள் என்ற புதிய உத்தியை தீவிரவாதிகள் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஹைதராபாத் குண்டுவெடிப்பு, லூதியானா குண்டுவெடிப்பு, ஆஜ்மீர் குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களில் செல்போன் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் போலியான பெயர்களில் சிம் கார்டுகளைப் பெற்று அவற்றை செல்போன் குண்டுகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
தீவிரவாதிகள் கையில் சிம் கார்டுகள் சகட்டு மேனிக்குப் புழங்குவதைத் தடுக்கவும், செல்போன் குண்டுகளை முற்றிலும் ஒழிக்கவும் மத்திய அரசு சிம் கார்டு விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் மதுகர் குப்தாவும், தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் மாத்தூரும் விரைவில் சந்தித்து ஆலோசித்து முடிவெடுத்து மத்திய அரசிடம் பரிந்துரைக்கவுள்ளனர்.
தற்ேபாது சிம் கார்டுகளை வாங்க விரும்புேவார் புகைப்பட அடையாளத்தைக் காட்ட வேண்டும், தங்களது இருப்பிட சான்றை அளிக்க வேண்டும் என்று உள்ளது. ஆனால் போலியான முகவரி, போலியான புகைப்படங்களைக் கொடுத்து பலரும் சிம் கார்டுகளை வாங்குவது சகஜமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications