ஆளுநரை சந்திக்க வந்த பெண் சுருண்டு விழுந்து சாவு
பெங்களூர்:
கர்நாடக மாநில ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் நடத்திய மக்கள் தரிசனம் நிகழ்ச்சியில், ஆஸ்த்மா பாதிப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து ஒரு பெண் பரிதாபமாக இறந்தார். இன்னொருவர் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு நிர்வாகத்தை ஆளுநரே கவனித்துக் கொள்கிறார்.
இந்த நிலையில் ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர், மக்கள் குறைகளைக் கேட்பதற்காக மக்கள் தரிசனம் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த மக்கள் தரிசனம் நிகழ்ச்சியில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டு ஆளுநரிடம் தங்களது குறைகளைக் கூறி நிவாரணம் கோரினர்.
இந்த நிகழ்ச்சியில், மாண்டியாவைச் சேர்ந்த லட்சுமி புட்டம்மா (40) என்ற பெண்ணும் கலந்து கொண்டார். இவர் கணவரால் கைவிடப்பட்டவர். தன்னுடன் வந்து தனது கணவர் குடும்பம் நடத்த வேண்டும், இதில் ஆளுநர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆளுநரிடம் மனு கொடுக்க வந்திருந்தார்.
அவருக்கு ஆஸ்துமா தொல்லை இருந்து வந்தது. இந்த நிலையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தபோது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மூச்சிறைப்பு அதிகமாக இருந்ததால் மூச்சு விட முடியாமல் திணறினார். உடனடியாக அவரை போலீஸார் அரசு பெளரிங் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில் அதே மாண்டியாவைச் சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர், வரிசையில் நின்றிருந்தபோது திடீரென விஷம் அருந்தினார். எனக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது என்று சத்தமாக கூறிக் கொண்டு அவர் விஷம் சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரையும் அங்கிருந்து பெளரிங் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் தேறி வருவதாக டாக்டர்கள் ெதரிவித்துள்ளனர்.
இந்த இரு சம்பவத்தாலும் ஆளுநரின் மக்கள் தரிசனம் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் நிகழ்ச்சி தடைபடாமல் தொடர்ந்து நடந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications