பேயை ஓட்ட பெண்களுக்கு சாட்டையடி!!
நாமக்கல்: விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் அருகே பெண்களை சாட்டையால் அடித்து பேயை விரட்டிய வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி என்ற கிராமத்தில் அஜ்ஜப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வருடந்தோறும் விஜயதசமி விழா அன்று 'பேய்' ஓட்டும் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கமாம்.
பல தலைமுறைகளாக நடத்தப்படும் இந்த திருவிழாவில், பேய் பிடித்து தவிக்கும் பெண்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து விஜயதசமி அன்று குவிந்து விடுகிறார்கள். இக்கோவிலில் குரும்பர் இன மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்.
இதேபோல் இந்த வருடமும் விஜயதசமி நாளான நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இவர்களில் பேய் பிடித்த ஆண்கள், பெண்கள் என அனைவரும் வரிசையாக மண்டியிட்டு அமர்ந்திருந்தனர். இவர்களுக்கு துணையாக உறவினர்கள் அருகிலேயே இருந்தனர்.
பூஜை துவங்கியதும் அஜ்ஜப்பன் கோவிலில் இருந்து காட்டுக் கோவிலுக்கு ஸ்வாமியை தூக்கிக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். பின்னர் ஒரு பூசாரியின் தலையில் தேங்காயை உடைத்து அதன் பின்னர் வரிசையாக அமர்ந்திருந்த பேய் பிடித்தவர்களை சாட்டையால் அடித்தார்.
பூசாரி அடித்ததில் பேய் பிடிக்காதவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். பேய் பிடித்த சில பெண்கள், சாட்டையடி வாங்கியவுடன் கூட்டத்தின் நடுவே சாமி ஆட ஆரம்பித்தனர். அவர்களுக்கு சாட்டையடி பூசாரி பேயை ஓட்டினார்.
இது தவிர குழந்தை பாக்கியம், திருமணத் தடை, தீராத நோய்களில் இருந்த நிவாரணம் பெற என்று ஏராளமான பெண்கள் விரும்பி வந்து சாட்டையடியை பெற்றுக் கொண்டனர்.
இது தவிர நேற்றிரவு 200க்கும் மேற்பட்ட ஆடுகளை தடியால் அடித்துக் கொல்லும் வினோத நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த வினோத நிகழ்ச்சிகளுக்கு மனித உரிமை அமைப்பினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications