2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பெற்ற குழந்தைகளை கொன்ற பெண் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் அருகேயுள்ள வெள்ளையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், துளசிமணி, பிரகாஷ் என்ற இரு மகன்களும் இருக்கிறார்கள்.
கணேஷ்குமார் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் குடும்பத்தின் அன்றாட பிழைப்புக்கே பெரும் கஷ்டமாக போனதால், மனைவி பழனியம்மாள் கணவரிடம் வேலைக்கு போகச்சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்.
இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. கணவனின் இந்த அலட்சிய போக்கால் வெறுத்துப் போன பழனியம்மாள், இன்று காலை தனது இரு மகன்களையும் ஊரில் உள்ள கிணற்றில் தள்ளி விட்டு கொன்றதுடன், தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிந்து அவர்கள் கிணற்றிலிருந்து மூவரின் சடலங்களையும் தீயணைப்புப் படையினரின் துணையுடன் மீட்டு வருகிறார்கள்.
குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட இந்த சம்பவம் வெள்ளையம்பட்டி கிராமத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications