வகுப்பில் மாணவி தற்கொலை ஏன்?-பரபரப்பு தகவல்கள்!
கடலூர்: கடலூர் புதுப்பாளையத்தில் வகுப்பறையில் மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து அவர் பரபரப்பு தகவல்களுடன் கூடிய 58 பக்க கடிதத்தை எழுதி வைத்துள்ளார்.
புதுப்பாளையம் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படித்து வந்தவர் ஆனந்தவள்ளி. இவர் நேற்று வகுப்பறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுதியில் மாணவி தங்கியிருந்த அறையில் போலீஸார் சோதனையிட்டபோது, மாணவியின் சூட்கேஸில் 58 பக்கங்களைக் கொண்ட ஒரு கடிதம் சிக்கியது.
ரத்தத்தால் அந்தக் கடிதத்தை மாணவி ஆனந்தவள்ளி எழுதியிருந்தார். அதில், நான் வாழும் நாட்கள் சிலதான். எனக்குப் பிடித்தவர்களோடு வாழ வரம் கொடு இறைவா. இல்லையென்றால் நீ படைத்த உயிரை நீயே எடுத்துக் கொள்.
காயத்ரி, நீ என்னைப் பார்த்து அன்பு என்றால் என்ன என்று கேட்டாய். ஆனால் அது என்ன என்பதை உன்னால் சொல்ல முடியாது. அன்பு என்ன என்பதை பிரிந்திருந்து பார்த்தல்தான் அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
வெளிப்படையான அன்பு என்பது ஏழு ஜென்மம் எடுத்தாலும் அது மறையாது. உன்னைப் பற்றி சாகும் சில மணி நேரத்திற்கு முன்புதான் நான் அறிந்து கொண்டேன். காலையில் நீ கூறிய வார்த்தைகள் என்னை எந்த அளவுக்கு வேதனைப் படுத்தியது தெரியுமா.
அது எப்படி உனக்குத் தெரியும். இருந்தாள் அவள், இல்லையென்றால் இனனொருவள் என்று வாழ்ந்த உனக்கு அன்பு என்றால் என்னவென்று தெரியுமா.
நீ இவ்வளவு நாள் எவ்வளவு கேவலமான எண்ணத்தோடு என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்பதைத் தெரிந்து கொண்டேன். நீ இவ்வளவு நாள் எதற்காக என்னிடம் பேசிக் கொண்டிருந்தாய் என்பதைப் புரிந்து கொண்டேன்.
நீ எனக்குக் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் கண்டிப்பாக இன்னொருவள் உன்னிடம் கூறுவாள். அப்போது நீ கண்டிப்பாக என்னை நினைத்துப் பார்ப்பாய்.
எனக்கு எல்லா இடத்திலும் அன்பு கிடைத்தது. ஆனால் நான் வயதின் கோளாறு காரணமாக உன் அன்பை எதிர்பார்த்தேன். இன்று காலை நீ கூறிய வார்த்தையில் பாதி உயிர் போனது. உன்னைப் பார்க்கும்போதெல்லாம் மீதி உயிர் போய்க் கொண்டிருக்கிறது.
உன்னைப் பார்த்து நான் வருத்தப்படுகிறேன். உன் பக்கத்தில் வரக் கூட எனக்குப் பிடிக்கவில்லை. அன்று உன் பக்கத்தில் நெஞ்சு வலியால் துடித்தபோது என்னை சிறிது கூட நீ ஏறெடுத்துப் பார்க்கவில்லை. நான் இதுவரை என் வீட்டில் என் துணியைக் கூட துவைக்க மாட்டேன். ஆனால் தினம் தினம் உன் துணியை துடைத்தேன். அதை எல்லாம் நினைக்கும்போது என் மனது எவ்வளவு வேதனைப்படுகிறது தெரியுமா.
காயத்ரி, உன்னிடம் நான் அன்பை மட்டுமே எதிர்பார்த்தேன். அது எனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அது கிடைக்கவில்லை.
என் அப்பா, அம்மா என்னை எவ்வளவு நேசித்தார்கள் என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் உன் அன்பை விட நான் உன்னை எல்லாரையும் விட அதிகமாக நேசித்தேன். இன்னும் அதிகமாக நேசித்துக் ெகாண்டிருப்பேன். எல்லோருக்கும் குறைகள் இருக்கும். ஆனால் எனக்கு எல்லாம் இருந்தும் நான் சாகிறேன் என்று எழுதியுள்ளார் ஆனந்தவள்ளி.
ஆனந்தவள்ளியின் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயத்ரி யார், அவருக்கும், ஆனந்தவள்ளிக்கும் என்ன உறவு இருந்தது, அவர் ஆணா அல்லது பெண்ணா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications