சிவகிரி அருகே ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதி கொலை
திருநெல்வேலி: சிவகிரி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள பாரதி கிழமேல் தெருவை சேர்ந்தவர் பூபதிராஜ். இவரது மனைவி சந்தானம். இருவரும் ஆசிரியர்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். மகள் சுபா திருமணமாகி கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். மகன் சரவணனும் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினியராக உள்ளார்.
இதனால் இந்தத் தம்பதி தனியே வசித்து வந்தனர். கடந்த 24ம் தேதியில் இருந்து இவர்களது வீடு திறக்கப்படவே இல்லை. இந் நிலையில் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் அடிக்கவே அப்பகுதி மக்கள் விஸ்வநாதப்பேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து வீட்டை உடைத்துப் பார்த்தபோது படுக்கையறையில் பூபதிராஜும் சந்தானமும் வாயில் ரத்தம் கசிந்தபடி தரையில் கவிழ்ந்தபடி இறந்து கிடந்தனர்.
இதையடுத்து புளியங்குடி டி.எஸ்.பி மோகன் நவாஸ் சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டார். பணத்திற்காகவும், நகைக்காகவும் இந்த கொலைகள் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications