மைனாரிட்டியிஸத்தை எதிர்க்கிறேன்- நரேந்திர மோடி
டெல்லி: அரசியலில் மைனாரிட்டியிஸத்தை புகுத்துவதைத் தான் நான் எதிர்க்கிறேன் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஆயிரக்கணக்கான அப்பாவி இந்து, முஸ்லீம்கள் பலியாகக் காரணமாக இருந்த குஜராத் கலவரத்தில் மோடிக்கும் நேரடி பங்கிருப்பதாக வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில் சஹாரா சமய் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டி
யாரும் மைனாரிட்டிகளை விரும்புவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், அரசியலில் மைனாரிட்டியிஸத்தை புகுத்துவதைத் தான் நான் எதிர்க்கிறேன். இதனால் தான் எதிலும் மைனாரிட்டிகளுக்கு முன்னுரிமை என்ற பிரதமரின் நிலையை எதிர்க்கிறேன். இது குறித்த என் எதிர்ப்பை தெரிவித்த பின்னர் தான் பிரதமரே தனது தவறை உணர்ந்தார்.
நான் ஆர்எஸ்எஸ் சேவகன் என்பதில் எனக்கு எப்போதுமே பெருமை தான். இந்துத்துவத்தை முழுவதுமாய் உணர்ந்தவர்கள் தான் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்.
குஜராத்தில் மீண்டும் மதக் கலவரம் வராது என்ற உறுதிமொழியைத் தருவீர்களா என்ற கேள்விக்கு மோடி நேரடியாக பதில் தரவில்லை. அவர் கூறுகையில், எங்களது மண்ணில் உயிர் பறிக்கும் வியாபாரிகளுக்கு இடமில்லை. தீவிரவாதிகளுக்கு குஜராத்தில் தக்க பதிலடி கிடைக்கும் என்றார்.
யார் அந்த உயிர் பறிக்கும் வியாபாரிகள் என்ற கேள்விக்கு பதிலளித்த மோடி, அவர்களை மிக எளிதாக அடையாளம் காண முடியும் என்றார்.
குஜராத்தின் 5.5 கோடி மக்களை காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு. என்னை விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும், எனக்கு கவலையில்லை. நான் குஜராத்தின் வளர்ச்சிக்காக உழைப்பவன் என்றார்.
உங்கள் கட்சியினரே குஜராத் கொலைகள் குறித்து பெருமையாக பேசி அது தெஹல்கா வீடியோவில் பதிவாகியுள்ளதே என்று கேட்டதற்கு, நேரடியாக பதிலளிக்க மறுத்த மோடி, குஜராத் மக்கள் அம் மாநில வளர்ச்சியில் பெருமை கொள்கிறார்கள் என்றார்.
ராகுலை முன் நிறுத்தி குஜராத் தேர்தல் காங்கிரஸ் சந்திக்கவுள்ளது குறித்து கேட்டபோது, குஜராத்தை ராகுல் காந்தி தனக்கு ஒரு பரிசோதனைக் கூடமாக பயன்படுத்தலாம். தனது திறமையை எல்லாம் அங்கு வந்து காட்டலாம். ராகுலுக்கு கூட்டம் கூடுமா இல்லையா என்ற கவலையெல்லாம் எனக்கில்லை. இந்தத் தேர்தலில் மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அதை யாராலும் மாற்ற முடியாது என்றார்.
உங்கள் அரசியல் வாழ்வில் தேசிய அளவில் ஏதாவது திட்டம் வைத்துள்ளீர்களா என்று கேட்டபோது, எனக்கு அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இல்லை, ஆனால், 5.5 கோடி குஜராத்திகளுக்காக உழைக்க வேண்டும் என்பது தான் என் குறிக்கோள் என்றார் மோடி.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications