பாஸ்போர்ட் மோசடி-டிராவல்ஸ் ஏஜெனட், புரோக்கர் உள்பட மூவர் கைது
நாகர்கோவில்: நண்பனின் ரேசன் கார்டை பயன்படுத்தி, புகைப்படத்தை மாற்றி மோசடி பாஸ்போர்ட் பெற முயன்றவரும் டிராவல்ஸ் ஏஜென்ட்டும் புரோக்கரும் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில் கீழமறவன் குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயராஜன். பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் செளதிக்கு வேலைக்கு சென்றா. ஆனால் அவர் சுற்றுலா விசாவில் சென்றதால் குறிப்பிட்ட விசா காலாவதியானவுடன் மீண்டும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
ஊரில் சில காலம் பெயிண்டிங் தொழில் செய்து வந்த ஜெயராஜின் பாஸ்போர்ட் காணாமல் போனது. மீண்டும் வெளிநாடு செல்ல விரும்பிய ஜெயராஜன், தனது பாஸ்போர்ட் காணாமல் போனதை மறைத்துவிட்டு, போலி பாஸ்போர்ட் தயாரிக்க திட்டமிட்டார்.
அதே பகுதியை சேர்ந்த தனது நண்பன் சுரேஷிடம் தனக்கு வங்கி கணக்கு தொடங்க ஜாமீன் தேவைப்படுவதாக கூறி அவரது ரேஷன் கார்டை பெற்று சென்றுள்ளார்.
பின்னர் வடசேரி புதுக்குடியிருப்பை சேர்ந்த டிராவல்ஸ் ஏஜென்ட் பிண்டோவி மற்றும் திருச்சி வரகநேரியை சேர்ந்த புரோக்கர் முருகதாஸ் ஆகியோர் உதவியுடன் ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் போட்டோவை மாற்றி தத்கல் முறையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தார்.
பாஸ்போர்ட் விசாரணைக்காக கோட்டார் காவல் நிலையத்தில் இருந்து சுரேஷ் வீட்டிற்கு போலீசார் சென்றபோது மோசடி அம்பலமானது. இதனையடுத்து கோட்டார் போலீசார் பாஸ்போர்ட் மோசடியில் ஈடுபட்ட ஜெயராஜன், டிராவல்ஸ் ஏஜென்ட் பிண்டோவி, திருச்சி புரோக்கர் முருகதாஸ் ஆகியோரை கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications