டிஐஜியின் உதவியாளர் வீட்டில் கொள்ளை!
திருச்சி: திருச்சியில் காவல்துறை டிஐஜியின் உதவியாளர் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது.
திருச்சி டிஐஜி அசோக்குமார் தாசின் உதவியாளர் ரவி. இவர் கே.கே.நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவில் அவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம மனிதர்கள் சிலர் வீட்டின் மேல் மாடிக்கு சென்றுள்ளனர். வீட்டு கதவை, பூட்டை உடைத்துள்ளனர். அதன் பின்பு அறைக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்கள் முழுவதையும் பார்த்துள்ளனர்.
ஆனால் கொள்ளையர்கள் எதிர்பார்த்தது போல் அங்கு பணம், நகைகள் எதுவும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு கோபத்தில் அங்குள்ள பொருட்களை தாறுமாறாக வீசி எறிந்துவிட்டு சென்றுள்ளனர்.
காலையில் தூங்கி எழுந்த பின்னர் வீட்டின் மேல்மாடிக்கு சென்ற ரவி அறையில் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் மாடி அறைகளை சோதனை செய்ததோடு கைரேகை நிபுணர்களை வரவழைத்து பதிவு செய்தனர்.
திருச்சி டிஐஜியின் உதவியாளர் வீட்டிற்குள் புகுந்து கொள்ளை நடந்த சம்பவம் திருச்சி மக்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications