காதல் மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவர்
சென்னை: காதலித்து மணந்து கொண்ட மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்ட கணவர் அவரை உயிரோடு தீவைத்து எரித்துக் கொடூரமாக கொன்றார். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மயிலாப்பூர் டொம்மி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன். கார் டிரைவராக இருக்கிறார். இவரது மனைவி ஷீபா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமாகி 5 ஆண்டுகளாகிறது. இருவருக்கும் குழந்தை இல்லை. ஷீபா பட்டதாரி ஆவார். ஆங்கிலத்தில் திறமையானவர். இதனால் அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆங்கில ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இதனால் மனதுக்குள் நவீனுக்கு தாழ்வு மனப்பான்மை உருவாகியுள்ளது.
மேலும், குடிப்பழக்கத்திற்கும் அவர் அடிமையாகியுள்ளார். தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். மனைவியை அடித்து உதைப்பார். அவரது நடத்தையிலும் சந்தேகப்பட்டு திட்டுவாராம்.
இருப்பினும் போதை தெளிந்த பின்னர் தனது செயலுக்காக வருந்தி ஷீபாவிடம் மன்னிப்பு கேட்பாராம்.
இந்த நிலையில் நவீனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் ெகாண்டு ஷீபா தனது பெற்றோர் வீட்டுக்குப் போய் விட்டார். நவீன் போய் கூப்பிட்டுப் பார்த்தும் வரவில்லை.
ஆனால் நவீன் மிகவும் வற்புறுத்திக் கேட்டதால் ஷீபா வீட்டுக்குத் திரும்பினார். இரவில் அவர் தூங்கிக் ெகாண்டிருந்தபோது, நவீன் எழுந்து ஏற்கனவே வாங்கி வைத்திருந்த அமிலத்தை எடுத்து அவர் மீது ஊற்றினார். அமிலம் உடலில் பட்டதால் அலறித் துடித்தார் ஷீபா. ஆனாலும் விடாத நவீன், அவரது உடலில் தீவைத்து விட்டு தப்பி விட்டார்.
உடல் முழுவதும் பரவிய தீயால் துடித்த ஷீபா, வெளியே ஓடி வந்து கதறித் துடித்து கூக்குரலிட்டார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஷீபாவை மீட்டு தீயை அணைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவியை எரித்துக் ெகான்று விட்டு தப்பி ஓடி தலைமறைவான நவீனை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நவீனே காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார்.
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, ஷீபா, தான் வேலை பார்த்து வந்த ஆசிரியர் ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகப்பட்டேன். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் திமிராக பதிலளித்தார். இதனால் ஆத்திரத்தில் அவரை கொன்று விட்டேன் என்றார்.
ஆனால் போலீஸ் விசாரணையின்போது ஷீபாவுக்கு அப்படி எந்த கள்ளக்காதலும் இல்லை என்று தெரிய வந்ததாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications