டாடா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் ஆக பெயர் மாறும் வி.எஸ்.என்.எல்.
டெல்லி: வி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பெயர் விரைவில் டாடா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் என மாற்றப்படவுள்ளது. இதற்கான ஒப்புதலை வி.எஸ்.என்.எல். இயக்குநர் குழு வழங்கியுள்ளது.
மத்திய அரசின் வசம் இருந்த நிறுவனம் வி.எஸ்.என்.எல். இதை சில வருடங்களுக்கு முன்பு டாடா குழுமம் வாங்கியது. அதன் பிறகும் கூட தொடர்ந்து வி.எஸ்.என்.எல். என்றே இதன் பெயர் நீடித்தது.
இந்தியாவின் முதலாவது இணையதள சேவையை வழங்கிய நிறுவனம் வி.எஸ்.என்.எல். உலக அளவில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் இதுவும் ஒன்று.
இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக 450 செல்போன் நிறுவனங்கள், 10 ஆயிரம் பிற நிறுவனங்கள், 5 லட்சம் பிராட்பேண்ட் மற்றும் இன்டர்நெட் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் வி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பெயரை மாற்ற அந்த நிறுவன இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன் படி டாடா கம்யூனிகேஷன்ஸ் லிமிட்டெட் என்று வி.எஸ்.என்.எல்லின் பெயர் மாறவுள்ளது.
டாடா குழுமத்தின் நிறுவனம் என்பதை பிரதிபலிக்கும் வகையில் வி.எஸ்.என்.எல்.லின் பெயர் மாற்றப்படவுள்ளது. மேலும் உலக அளவிலான பிரபலம் அதிகரிக்கும் இது உதவும் என்று டாடா குழுமத் தகவல் தெரிவிக்கிறது.
இதுகுறித்து வி.எஸ்.என்.எல். நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்ரீநாத் கூறுகையில், தரமான, விரிவான சேவையை வழங்கி வரும் எங்களது நிறுவனத்திற்கு இந்தப் பெயர் மாற்றம் ஒரு முக்கியமான நிகழ்வாகும். உலக அளவில் சிறந்த சேவையை வழங்க இனி எளிதாக இருக்கும் என்றார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வி.எஸ்.என்.எல். நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியது. அதன் பிறகு பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications