ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ்கள் ரூ.50 லட்சம் செலுத்தி மீட்பு
திருநெல்வேலி: விபத்து வழக்குகளில் நஷ்டஈடு தரமால் இழுத்தடித்ததால் ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகளை ரூ.50 லட்சம் செலுத்தி தமிழக போக்குவரத்து துறை மீட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 13 அரசு போக்குவரத்து கழக டிப்போக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் அரசு பேருந்துகளால் பல்வேறு விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளில் விசாரணை முடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் போக்குவரத்து துறை நஷ்ட ஈட்டு தொகையை வழங்காததால் பாதிக்கப்பட்டவர்கள் பேருந்துகளை ஜப்தி செய்ய மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனால் அரசு பேருந்துகள் நீதிமன்ற ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் 18 பேருந்துகளும், மற்ற தாலுகா நீதிமன்றங்களில் 5 பேருந்துகளும் ஜப்தி செய்யப்பட்டு பலமாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் பொதுமக்கள் பல்வேறு வழித்தடங்களில் பயணம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும் அரசு போக்குவரத்து துறைக்கு இதனால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டது.
மேலும் நெல்லை நீதிமன்ற வளாகத்தில் அதிகளவில் பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருந்ததால் பேருந்து நிலையம் போல் காட்சியளித்தது.
இதனிடையே நேற்று முன்தினம் திமுக இளைஞர் அணி மாநாட்டு பந்தலை பார்வையிட்ட அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேருவும் வந்தார்.
அப்போது தொ.மு.ச. நிர்வாகிகள் இது குறித்து போக்குவரத்து அமைச்சரிடம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின் பேரில் நீதிமன்றங்களில் ஜப்தி செய்து நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளுக்கு நஷ்ட ஈடு தொகை முழுவதையும் செலுத்தி மீட்க போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அமைச்சரின் இந்த உத்தரவினால் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நீதிமன்றங்களில் ஜப்தி செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த 23 பேருந்துகளுக்கு ரூ.50 லட்சம் செலுத்தி மீட்டனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications