திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா: சிறப்பு ஏற்பாடுகள்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழாவையொட்டி சிறப்பு பேருந்துகள் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கந்தசஷ்டி திருவிழா வருகிற 10ம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி 16ம் தேதி வெள்ளிக்கிழமை முடிவடைகிறது. விழாவை முன்னிட்டு திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுப்பது சம்பந்தமாக அனைத்து அரசு துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிசுவாமி கோவில் வாளகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அர.பழனியாண்டி தலைமை தாங்கினார். கோவில் நிர்வாக அதிகாரி ராமராஜூ, திருச்செந்தூர் உதவி கலெக்டர் மருதநாயகம், உதவி போலீஸ் சுப்பிரண்டு சாமிதுரை, கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் வக்கீல் சு.கு.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தரமான குடிநீர் வழங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் தினமும் 1 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கவும், கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரத்தன்று 2 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தற்காலிக குடிநீர் பந்தல் அமைத்து சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி முலம் தரமான குடிநீர் வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்கு ஏற்ப 60 தற்காலிக கழிப்பிடம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
திருவிழாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக 250 சிறப்பு பஸ்கள் அரசு போக்குவரத்து கழகம் மூலம் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவில் வாளகத்தில் பக்தர்கள் பயமின்றி, பாதுகாப்புடன் தரிசனம் செய்ய கூடுதலாக 1200 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் முலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications