கடைக்குப் போன பெண்ணைக் கற்பழிக்க முயன்ற இருவர் கைது
கரூர்: கரூரில் மளிகைகடைக்கு சென்ற இளம் பெண்ணை கற்பழிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் அருகே உள்ளது மேலப்பாளையம் என்ற கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் கிருஷ்ணன். இவரது மனைவி கன்னியம்மாள்.
கன்னியம்மாள் மளிகை பொருள் வாங்க மளிகை கடைக்கு சென்றுள்ளார். அப்போது ரயில்வே கேட்டை தாண்டி செல்லும் போது திடீர் என வந்த இருவர் கன்னியம்மாளை கண் இமைக்கும் நேரத்தில் அருகில் உள்ள மறைவான காட்டு பகுதிக்கு தூக்கி சென்றனர்.
கன்னியம்மாள் சத்தம் போட முடியாதபடி அவரது வாயை துணியால் வைத்து அடைத்தனர். காட்டு பகுதிக்குள் வைத்து கன்னியம்மாளை அந்த இருவரும் கற்பழிக்க முன்றுள்ளனர்.
அந்த நேரத்தில் கன்னியம்மாளின் உறவினர் ஒருவர் அந்த வழியே வர அவர் கூச்சல் போட்டு ஊர் மக்களை திரட்டியுள்ளார். உடனே திரண்ட பொது மக்கள் அந்த இருவருக்கும் தர்ம அடி போட்டு அவர்களிடம் இருந்து கன்னியம்மாளை காப்பாற்றினர்.
சிகிச்சைக்காக அவரை கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் கன்னியம்மாளை கற்பழிக்க முயன்ற முருகானந்தம், சக்திவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications