அனுமதியின்றி பயணிகளை ஏற்றிச் சென்ற படகு பறிமுதல்
ராமேசுவரம்: ராமேசுவரம் கடற்பகுதியில் முறையான அனுமதியின்றி சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற நாட்டு படகை இந்திய கடற்படையினர் தடுத்து நிறுத்தினர்.
ராமேசுவரத்திற்கு தினந்தோறும் வெளிநாட்டு பயணிகள் உட்பட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடல்பகுதிகளில் ஆங்காங்கு உள்ள சிறு தீவுகளுக்கு செல்ல விரும்பும் பயணிகளை அப்பகுதி மீனவர்கள் மீன்வளத்துறை அலுவலகத்தில் முறையான அனுமதி பெற்று படகுகளில் அழைத்து சென்று காட்டுவது வழக்கம்.
நேற்று ராமேசுவரத்திற்கு சுற்றுலா வந்த குழந்தைகள், பெண்கள் உட்பட வெளிநாட்டினரை நாட்டுப் படகு ஒன்றில் ஏற்றிக் கொண்டு அப்பகுதி படகோட்டிகள் சிலர் கடலில் வலம் வந்துள்ளனர்.
அப்போது பாம்பன் கடல் பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ரோந்தில் ஈடுபட்டிருந்தது. அப்பகுதியில் வலம் வந்த நாட்டு படகைப் பார்த்த கடற்படையினர், இது குறித்து மீன்வளத் துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் பாம்பன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து சென்று நாட்டு படகை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அனுமதியில்லாமல் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து படகை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications