முல்லை பெரியாறில் புதிய அணை: தடுக்க ஜெ. கோரிக்கை
சென்னை: முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட முயலும் கேரள அரசின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தென் மாவட்டங்களின் உயிர் நாடிப் பிரச்சனையாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் விளங்கி வருகின்ற முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை கேரள அரசு 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்துவிட்டது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்கப்பட்ட அளவான 136 அடியிலிருந்து 142 அடியாக உடனடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2006ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதியன்று தீர்ப்பு வழங்கியதோடு, இதற்கு கேரள அரசு எத்தகைய இடையூறும் விளைவிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு நேர்மாறாக, கேரள அரசு சட்டசபையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து அந்த சட்டத் திருத்தத்தை 2006ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வந்தது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையிலும், கேரள அரசின் சட்டதிருத்தத்தை எதிர்த்து எனது தலைமையிலான அரசு 27-03-2006 அன்று உச்ச நீதிமன்றத்தல் வழக்கு தொடர்ந்தது.
ஆனால் அதற்கு பின்னர் வந்த திமுக ஆட்சியில் உச்ச நீதிமன்றம் மூலமாகவோ, பேச்சுவார்த்தை மூலமாகவோ தீர்ப்பை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக முல்லை பெரியாறு அணை 136 அடிக்கும் மேலாக நிரம்பி உபரி நீர் இன்றளவிலும் வீணாகக் கடலில் கலந்து கொண்டிருக்கிறது மிகுந்த வேதனை அளிக்கிறது.
இந்த சூழ்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் அருகே புதிய அணை கட்டும் பணிகள் தொடங்கும் எனவும், இது தொடர்பாக திட்ட அறிக்கை 6 மாதத்திற்குள் பூர்த்தியாகிவிடும் என்றும் ஏற்கனவே கேரள அரசு தெரிவித்தது.
முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவோம் என கேரள அரசு அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து, அணை சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை விரைந்து நடத்தவும், தற்போது கேரள அரசு முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவதற்கான பணிகளை துரிதப்படுத்துகின்ற செயலை தடுக்கும் விதமாகவும், புதிய வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் திமுக அரசு தொடர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தேன்.
தற்போது முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் பணி திட்டமிட்டபடி தொடங்கும் என கேரள மாநில முதல்வர் மீண்டும் அறிவித்துள்ளார். இதற்கான புதிய அலுவலகம் வருகின்ற 19ம் தேதி தொடங்க இருப்பதாகவும், அதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
தமிழக தரப்பில் இதை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவாகத்தான், கேரள மாநில அமைச்சரவை திருவனந்தபுரத்தில் கடந்த 9ம் தேதி கூடி விவாதித்து, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் பணி தொடங்கும் என்றும், அதன் ஒரு பகுதியாகத்தான் அணையைச் சுற்றியுள்ள பகுதியில் வாழும் மக்களை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும், கேரள முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
எனவே முல்லைப் பெரியாற்றில் புதிய அணையை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications