செல்லில் பேசியவர் மின்னல் தாக்கி பலி
Subscribe to Oneindia Tamil
கடையநல்லூர் (நெல்லை): செல்போனில் பேசியபோது மின்னல் தாக்கி வாலிபர் பலியானார்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சாத்தாபுரம் நடுத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மாரி கணேசன் மற்றும் 15 பேர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
கணேசனுக்கு செல்போன் அழைப்பு வந்தது. செல்போனை எடுத்து கணேசன் பேச முயன்றார். அப்போது கணேசன் மின்னல் தாக்கி இறந்தார்.
ராம்ஜி என்பவரது மகன் கணேஷ் காயம் அடைந்தார். மேலும் நான்கு பேர் மயங்கி விழுந்தனர். போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணேசனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications