காதி குறித்து தவறாக சொல்லவில்லை - ராகுல் காந்தி
Subscribe to Oneindia Tamil
லக்னோ: காங்கிரஸ்காரர்கள் கதர் அணிய தேவையில்லை என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. காதிதான் காங்கிரஸின் நிரந்தர அடையாளம் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.டெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் விதிகளில் நடைமுறைக்கு ஏற்ப மாற்றம் செய்ய வேண்டும். காங்கிரஸ் தொண்டர்களை கதராடை அணிய வற்புறுத்தக் கூடாது என்று கூறியதாக தகவல்கள் வெளியானது. இதனால் சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில் லக்னோ வந்த ராகுல் காந்தி கதராடை குறித்து தான் தவறாக பேசவில்லை என்று விளக்கினார். அவர் கூறுகையில்,
காங்கிரஸ் கட்சியில் சேருபவர்களை கதர் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. நான் தினமும் கதராடை தான் உடுத்துகிறேன்.
அப்படியிருக்கையில் கதர் அணிய தேவையில்லை என்று நான் எப்படி கூறுவேன். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நில உச்சவரம்பு சட்டம் பற்றி மட்டுமே பேசினேன்.
காலத்துக்கேற்ப காங்கிரஸ் விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று நான் கூறினேன். அதற்கு கதர் அணிய தேவையில்லை என்று அர்த்தம் கிடையாது.
உத்தரப்பிரதேசத்தில் கட்சி பலவீனமாக உள்ளது கவலையளிக்கிறது. இதை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் ராகுல்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications