விசிட் விசாவில் நர்ஸ் வேலை பார்க்க யு.ஏ.இ. அனுமதி
துபாய்: விசிட் விசா மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்து வேலை பார்க்க நர்சுகளுக்கு எமிரேட்ஸ் அரசு அனுமதி அளித்துள்ளது.
ஐக்கிய அரசு எமிரேட்ஸ் அரசு தனது சுகாதாரத் துறையின் கொள்கையில் சில மாற்றங்களை செய்துள்ளது. இதன் மூலம் இதுவரை வந்த சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதன்படி இனிமேல் விசிட் விசா மூலம் எமிரேட்ஸுக்கு வந்து வேலை பார்க்க நர்சுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து எமிரேட்ஸ் சுகாதாரத் துறை மருத்துவ உதவிச் செயலாளர் டாக்டர் அபுல் கப்பார் அப்துல் கப்பார் கூறுகையில், விசிட் விசா மூலம் எமிரேட்ஸுக்கு வந்து நர்ஸ் வேலை பார்க்க இனிமேல் அனுமதிக்கப்படும். சுகாதாரத் துறை மூலம் நடத்தப்படும் நர்ஸ் தேர்வில் அவர்கள் கலந்து கொள்ளலாம். விசிட் விசாவில் வருவோர் தனியார் மருத்துவமனைகளில் வேலை பார்க்க அனுமதிக்கப்படுவர்.
மேலும் அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக பணியாற்ற வேண்டிய கால நிர்ணயமும் குறைக்கப்படவுள்ளது. இதை 2 ஆண்டுகளாக குறைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் கப்பார்.
எமிரேட்ஸில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நர்சுகளுக்குப் பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்தே தனது கொள்கையில் எமிரேட்ஸ் அரசு மாற்றம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எமிரேட்ஸில் நர்ஸ் வேலை பார்க்க வருவோருக்காக சுகாதாரத் துறை மூலம் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. அங்கு அவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் அவர்கள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் 3 ஆண்டுகளுக்கு பணியாற்ற வேண்டும். தற்போது அந்த கால நிர்ணயம் 2 ஆண்டுகளாக குறைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய விதிமுறை தளர்வால், இந்திய நர்சுகளுக்கு பெரும் லாபம் கிடைக்கும். எமிரேட்ஸில் அதிக அளவில் இந்திய நர்சுகள்தான் பணியாற்றுகின்றனர். அதிலும் கேரள நர்சுகள்தான் எமிரேட்ஸில் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications