எஸ்பி விசாரணைக்கு பயந்து ஏட்டு தற்கொலை!
தேனி: தேனியில் எஸ்பி விசாரணைக்கு பயந்து ஏட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
தேனியை அடுத்துள்ள உத்தமபாளையம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் சேகர் (47). இவருக்கு திருமணமாகி ஜோதி என்ற மனைவியும், 3 குந்தைகளும் உள்ளனர். இவர் வடக்குபட்டியில் குடும்பத்துடன் தங்கியிருக்கிறார்.
இவர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு வந்து கொண்டே இருந்தது. இதனால் எஸ்பி சுதாகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை அழைத்து விசாரித்துள்ளார். பல மணி நேர விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். அதற்கு பிறகு வழக்கம் போல் சேகர் பணிக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் சேகரின் இறந்து போன மாமாவிற்கு சுருளியில் சடங்கு செய்ய முடிவு செய்யப்ப்ட்டது. இதற்கு செல்ல மறுத்த ஏட்டு சேகர் வீட்டிலேயே இருந்துவிட்டார். இனால் ஏட்டுவின் மனைவி, குழந்தைகள் ஆகியோர் சுருளிக்கு சென்றனர்.
வீட்டில் தனியாக இருந்த ஏட்டு சேகர் பூச்சி கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த போலீசார் சேகரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசேதனை முடிவுக்கு பின் சேகரின் பிரேதத்தை வாங்க அவர் மனைவி மற்றும் உறவினர்கள் மறுத்து விட்டனர்.
ஏட்டு சேகர் சாவுக்கு எஸ்பி சுதாகர் தான் காரணம் என கூறி பிரேதத்தை வாங்க மறுத்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications