முஷாரப் செளதி பயணம்: ஷெரீப்புடன் பேச்சு?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் இரண்டு நாள் பயணமாக செளதி சென்றார். அங்கு முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை முஷாரப் சந்திக்கக் கூடும் என்று தெரிகிறது.
பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்படுத்திய பின் முஷாரப் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. செளதி மன்னர் அப்துல்லாவுடன் தனது நாட்டின் அரசியல் நிலைமை குறித்து முஷாரப் ஆலோசிப்பார் என்று தெரிகிறது.
பாகிஸ்தானுக்கு நிதியுதவு செய்யும் முக்கிய நாடு செளதி அரேபியா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாகிஸ்தானுக்கு நெருக்கடியான நேரங்களில் செளதியின் அறிவுரையை அந் நாட்டு ஆட்சியாளர்கள் கேட்பது வழக்கம்.
அந்த வகையில் முஷாரப் செளதிக்கு சென்றுள்ளார். அங்கு அரசியல் தஞ்சம் புகுந்துள்ள ஷெரீப்பையோ அல்லது அவரது ஆலோசகர்களைேயா முஷாரப் சந்திக்கக் கூடும் என்று தெரிகிறது.
தனது அரசுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் தனது அரசியல் எதிரிகளுடனும் சமாதானமாக போக வேண்டிய நிலைக்கு முஷாரப் தள்ளப்பட்டுள்ளார்.
ஆனால் இந்த சந்திப்பை நவாஸ் ஷெரீப் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவர் கூறுகையில்,
முஷாரப் என்னை சந்திக்க முயற்சிப்பது தேவையில்லாதது. முஷாரப்பிற்கு கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை. அதேபோல் நானும் அவரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால், செளதி நிர்பந்தித்தால் இருவரும் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications