பெண் கற்பழிப்பு: மதபோதகர், மனைவிக்கு போலீஸ் வலை
உளுந்தூர்பேட்டை: சிகிச்சைக்காக வந்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்த மத போதகரும், அவரது மனைவியும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரத்தில் வசித்து வருபவர் ரிச்சர்ட் தாஸ். மதபோதகரான இவர் வைத்தியராகவும் உள்ளார். இவரது மனைவி ராணி.
ரிச்சர்ட் தாசிடம் லீலா (18-பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது தாய்-தந்தையுடன் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது 2 மாதம் வரை மல்லிகா என் வீட்டில் தங்கி இருந்தால் தான் வைத்தியம் பார்க்க முடியும் என்று ரிச்சர்ட் கூறினார்.
இதை நம்பி மல்லிகாவை தாஸின் வீட்டில் பெற்றோர் வீட்டு விட்டு சென்றுவிட்டனர். அதன்பிறகு மல்லிகாவை வாரம் ஒரு முறை அவரது தாய் சென்று பார்த்து வந்தார்.
இந் நிலையில் கடந்த 9ம் தேதி மல்லிகாவை பார்க்க தாயார் வந்தார். அங்கு மல்லிகா இல்லை. அவர் வெளியூர் சென்று விட்டதாக ரிச்சர்டின் மனைவி ராணி கூறினார்.
ஆனால், அதே ஊரில் உள்ள அய்யனார் என்பவரது வீட்டில் மல்லிகா தஞ்சம் புகுந்துள்ளதாக அவரது பெற்றோருக்குத் தெரியவந்தது. இதையடுத்து அவரை பெற்றோர் மீட்டனர்.
மல்லிகாவை ரிச்சர்ட் தாஸ் மற்றும் அவருடைய மனைவி அடித்து கொடுமைப்படுத்தியதும், மல்லிகாவுக்கு மயக்க மருந்து கொடுத்து ரிச்சர்ட் கற்பழித்த விவரமும் தெரியவந்தது. இந்த கற்பழிப்புக்கு ராணியும் உடந்தையாக இருந்தாக மல்லிகா கூறியுள்ளார்.
இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசில் மல்லிகாவின் தாயார் புகார் செய்தார். இதையடுத்து ரிச்சர்ட் மற்றும் அவரது மனைவி தலைமறைவாகிவிட்டனர் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள ரிச்சர்ட் தாசுக்கு 4 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனராம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications