நாஞ்சில் சம்பத் விவகாரத்தில் அரசியல் பழிவாங்கல்-வைகோ
சென்னை: அனைத்து அவதூறு வழக்குகளையும் வாபஸ் பெறும்போது நாஞ்சில் சம்பத் மீதான வழக்குகளை மட்டும் வாபஸ் பெற மறுப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த ஆட்சியில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற முடிவு செய்து, 2006ம் ஆண்டு மே 27ம் தேதி தமிழக அரசு ஆணை வெளியிட்டது.
அதன்படி, குற்றவியல் நீதிமன்றங்களில் அரசியல் தலைவர்கள், மேடைப் பேச்சாளர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற அறிவுறுத்தி, சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு நகல் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் மீது தொடரப்பட்ட 22 அவதூறு வழக்குகளை தடை செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை வழங்கியது.
அந்த வழக்குகளை விரைந்து விசாரிக்க அரசுத் தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நாஞ்சில் சம்பத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வழக்குகளைத் திரும்பப் பெற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினர்.
ஆனால் சம்பத் விவகாரத்தில் அரசாணையை நடைமுறைப்படுத்த முடியாது என அரசு வழக்கறிஞர் மறுத்து கடிதம் அனுப்பியுள்ளதாக வாதிட்டார்.
மற்றவர்கள் வழக்குகளையெல்லாம் திரும்பப் பெற சம்மதித்த அரசு வழக்கறிஞர்கள், சம்பத் மீதான வழக்கை திரும்பப் பெற மறுத்திருப்பது வியப்பாக உள்ளது.
முதல்வர் கருணாநிதியின் உத்தரவை அவரால் நியமனம் செய்யப்பட்ட அரசு வழக்கறிஞர்களே ஏற்க மறுத்து நிராகரித்தது என்.
இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியுள்ளார் வைகோ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications