கருணாநிதியின் கட்டுப்பாட்டில் திமுக இல்லை-இல.கணேசன்
சிதம்பரம்: தமிழ்நாட்டில் வன்முறை அதிகரித்து வருகிறது என பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
சிதம்பரம் வந்த கணேசன் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் நிருபர்களிடம் பேசுகையில்,
மத்தியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது உறுதி.
கர்நாடகாவில் பாஜகவுக்கு கெளடா நம்பிக்கை துரோகம் செய்து விட்டார். அரசியலில் தன்னை சாணக்கியனாக காட்டி கொள்ள முயன்று தோல்வியை தழுவிவிட்டார். இதன்மூலம் அவர் செல்லாகாசாகி விடுவார்.
தமிழகத்தில் அரசியல்வாதிகளுக்கும், ரவுடிகளுக்கு வித்தியாசம் தெரியவில்லை. பெரும்பாண்மையான இடங்களில் ஆளும்கட்சியே ரவுடிதனத்தை கட்டவிழ்த்து விடுகிறது. திமுக தற்போது கலைஞர் கையில் இல்லை. இரண்டாம் தர தலைவர்களின் ஆளுமையால் மூன்றாம் தாரமாக செயல்படுகிறது.
தமிழகத்தில் திமுக பல மாவட்டங்களை சமஸ்தானங்களாக பிரித்து கொடுத்து போலீசாரை கையில் வைத்து கொண்டு ரவுடிசத்தை வளர்த்து வருகிறது.
திருவாரூரில் கம்யூனிஸ்டு அலுவலகம் தீ வைக்கப்பட்டுள்ளது. காங்கிரசாரின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை.. இப்படி கூறிக் கொண்டே போகலாம்.
இனி தமிழகத்தில் திமுக ஆட்சியே இல்லை, வராது. நாடாளுமன்றத்துக்கும் தமிழக சட்டமன்றத்துக்கும் சேர்த்து தேர்தல் வரும்.
மக்கள் நலனுக்காகவே மத்தியில் காங்கிரஸை ஆதரிப்பதாக கருணாநிதி கூறுகிறார். தமிழ் அகராதியை சற்று கூர்ந்து பார்த்தால் அகராதியில் மகள் மற்றும் மகன்களை 'மக்கள்' என்றே அழைப்பார். அதன் அடிப்படையில் பார்த்தால் அவர் 'மக்கள்' நலன் கருதியே ஆதரவு தெரிவித்துள்ளார். நாம் தவறாக புரிந்து கொண்டு வருகிறோம்.
எனவே 'தம் மக்கள்' நலனில் மட்டுமே அக்கறை காட்டும் திமுகவை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றார் கணேசன்.
முன்னதாக திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
தமிழ்நாட்டில் வன்முறை அதிகரித்து வருகிறது. பாஜக கட்சி அலுவலகங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றன.
வன்முறையை கட்டவிழ்த்து விட்டால் அனைவரும் பாதிக்கப்படுவர் என்பதற்கு உதாரணம் திருவாரூர் சம்பவம் ஆகும். வன்முறையை எந்த கட்சியும் ஆதரிக்கக் கூடாது.
கரும்புக்கு விவசாயிகளின் தேவைக்கு ஏற்ற விலையை அரசு தரவில்லை. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கரும்பிலிருந்து எத்தனால் தயாரிக்கும் தொழிற்சாலைளை கிராமத்தினரே தொடங்க அரசு அனுமதிக்க வேண்டும்.
கோதுமை, நெல்லுக்கு உரிய விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.
மீனவர்களின் நலனை தமிழக அரசு சரியாக கவனிக்கவில்லை. அவர்களின் நலனை காக்க பாஜக சார்பில் வரும் 30ம் தேதி சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications