கலெக்டர் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் கிளை தடை
தேனி: தேனியை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் தொடர்ந்த வழக்கில் தேனி மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை உயர் நீதிமன்றம் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
தேனியை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி புரிந்த பாலசுப்பிரமணியன், வேலுசாமி, சுப்பிரமணி, ஈஸ்வரன், நாராயணசாமி, சிகார்ஹையத்கான் ஆகியோர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
நாங்கள் ஆறு பேரும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் முறைப்படி தேர்வு செய்து இரவு காவலர்களாக நியமிக்கப்பட்டோம் பின்னர் பதவி உயர்வு பெற்று பதிவரை எழுத்தர் மற்றும் உதவியாளர்களாக பணியாற்றி வந்தோம்.
எங்கள் பதவி உயர்வு முறையாக அளிக்கப்படவில்லை என கூறி தேனி மாவட்ட கலெக்டர் எங்களுடைய பதவி உயர்வை கடந்த செப்டம்பர் 26ம் தேதியன்று ரத்து செய்ததுடன் சம்பள உயர்வையும் ரத்து செய்யச் சொல்லி உத்தரவு போட்டுள்ளார். இதனை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பால்வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதி தனது உத்தரவில், தேனி மாவட்ட கலெக்டர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், இந்த வழக்கு குறித்து ஊரக வளர்ச்சி துறை செயலாளர், தேனி மாவட்ட கலெக்டர் ஆகியோரிடமிருந்து 4 வாரத்தில் பதில் மனு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications