பழனி-புதருக்குள் கிடந்த 120 மூட்டை ரேஷன் அரிசி
பழனி: பழனி அருகே புதருக்குள் கேட்பாரற்று கிடந்த 120 மூட்டைகள் ரேஷன் அரிசியை அதிகாரிகள் கைப்பற்றினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ளது பாறைபட்டி கிராமம். மெயின்ரோட்டிலிருந்து பாறைபட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் ஒரு புதருக்குள் ஏராளமான ரேஷன் அரிசி மூட்டைகள் கிடப்பதாக நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து வருவாய் அலுவலர், தாசில்தார் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் விரைந்து வந்து கேட்பாரற்று கிடந்த 120 மூட்டைகள் ரேஷன் அரிசியை கைப்பற்றினர்.
வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்காக கடத்தி வரப்பட்டு இங்கு பதுக்கி வைத்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அரிசி மூட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, யார் கடத்தியது என்று அதிகாரிகள் அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் அனைத்தும் பழனியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.












Click it and Unblock the Notifications