உ.பி தொடர் குண்டுவெடிப்பில் 15 பேர் பலி, 59 பேர் படுகாயம்
வாரணாசி: உத்தரப் பிரதேசத்தில் 3 இடங்களில் அடுத்தடுத்து நடந்த 6 குண்டுவெடிப்புகளில் 15 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 59 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் நேற்று பிற்பகல் 1 மணியளவில் லக்னெள, பைசாபாத் நகரங்களில் உள்ள நீதிமன்ற வளாகங்களிலும், வாரணாசி கலெக்டர் அலுவலக வளாகத்திலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
இந்த குண்டுவெடிப்பில் 15 பேர் வரை பலியாகியுள்ளனர். 59 பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த இடங்களில் நிகழ்ந்த இந்த குண்டு வெடிப்பில் 9 பேர் வாரணாசியும் 4 பேர் பைசாபாத்திலும், லக்னெளவில் 2 பேரும் பலியாகியுள்ளனர்.
3 இடங்களிலும் 6 வெடிகுண்டுகள் சைக்கிள்களில் வைத்து வெடிக்க செய்யப்பட்டுள்ளன. இந்த வெடிகுண்டுகள் ஆர்.டி.எக்ஸ் வகையைச் சேர்ந்தவை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்துக்கு இந்தியன் முஜாகிதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இத்தகவலை அந்த அமைப்பு ஈ-மெயில் மூலம் தெரிவித்துள்ளது.
பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000மும் நிதியுதவி வழங்கப்படும் என உபி முதல்வர் மாயாவதி அறிவித்துள்ளார்.
பிரதமர் கண்டனம்:
உத்தரப்பிரேதச தொடர் குண்டு வெடிப்புக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உகாண்டாவில் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற அவர் அங்கிருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
உ.பி.யில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. உயிர் இழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிதியுதவி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக, விஎச்பி பந்த் அறிவிப்பு:
இந்த தொடர் குண்டு வெடிப்பை கண்டித்து இன்று உத்தரப்பிரதேசம் முழுவதும் பந்த் நடத்தப்பபட்டு வருகிறது.
இது தவிர சமாஜ்வாடி கட்சி சார்பில் இன்று காலை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
மாநிலத்தில் மேலும் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications