ஹாட்மெயில் பாட்டியாவின் புது சாஃப்ட்வேர்
பெங்களூர்: உலகப் புகழ் பெற்ற ஹாட்மெயிலை உருவாக்கிய சமீர் பாட்டியா, எம்.எஸ்.ஆபிஸ் போன்ற புதிய அப்ளிகேசன் சாஃப்ட்வேரை உருவாக்கியுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்தவர் சபீர் பாட்டியா. இவர் இன்ஸ்டாகால் என்ற நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஹாட் மெயிலை சபீர் பாட்டியா தான் உருவாக்கினார்.
பல வருடங்களுக்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனம் 400 மில்லியன் டாலர்கள் கொடுத்து ஹாட்மெயிலை பாட்டியாவிடமிருந்து வாங்கியது.
அதன் பின்னர் பாட்டியா பல சாப்ட்வேர் தொழில்நுட்பங்களை உருவாக்கினார். இருப்பினும் அவை பெரிய அளவில் உருவெடுக்கவில்லை.
தற்போது மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் எம்எஸ்-ஆபிஸ் என்ற சாஃப்ட்வேர் தான் அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கிறது. இத நிலையில், அதற்கு மாற்றாக பாட்டியாவின் நிறுவனம், புதிய சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கியுள்ளது.
இதன் அறிமுக விழாவும், செயல்முறை விளக்கமும் 22ம் தேதி பெங்களூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், இன்ஸ்டாகால் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுமாநாத் ராகவேந்திரா பேசுகையில்,
இந்த புதிய சாஃப்ட்வேர், மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் எம்.எஸ்.ஆஃபிஸை விட சிறந்ததாக இருக்கும். அதில் உள்ள சில குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
இதனை தனி நபர்கள் இணையதளம் மூலமாக இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். பெரிய நிறுவனங்களுக்கு தேவை எனில் கட்டணம் வசூலிக்கப்படும். அதற்கு கட்டணம் மிக குறைவு தான்.
இன்ஸ்டாகாலின் இந்த சாஃப்ட்வேரை அரிசென்ட் (பிளக்ஸ்ட்ரானிக்ஸ்) என்ற நிறுவனம் பயன்படுத்த உரிமை பெற்றுள்ளது. அந்நிறுவனத்தின் 7,000 ஊழியர்கள் முதல் கட்டமாக இதைப் பயன்படுத்த போகின்றனர்.
இந்த சாப்ட்வேரைப் பயன்படுத்த, நிறுவனங்களுக்கு, ஒரு வருடத் தேவைக்கு என்றால் 50 அமெரிக்க டாலர்களும், மாதத்திற்கு எனில் 10 டாலர்களும் வசூலிக்கப்படும்.
நிறுவனங்களில் பயன்படுத்தப் போகும் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையை பொறுத்து இது மாறுபடும். இந்த சாஃப்ட்வேரை வாங்குபவர்களுக்கு இலவசமாக செயல்முறை விளக்கமும் சொல்லித் தரப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications