சஞ்சய் தத்துக்கு ஜாமீன் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு

1993ம் ஆண்டு மும்பையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் சஞ்சய் தத் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தீர்ப்பின் நகல் அவருக்கு வழங்கப்படாததால் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து சில வாரங்களுக்கு சஞ்சய் தத் வெளியில் இருந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவருக்கு தீர்ப்பு நகல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், முழுமையான ஜாமீன் கோரி சஞ்சய் தத் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், சஞ்சய் தத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அவரது நண்பர் யூசுப் நல்வாலாவுக்கும் ஜாமீன் கிடைத்தது. அதேசமயம், மேமன் சகோதரர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
சஞ்சய் தத் மற்றும் நல்வாலாவுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதையடுத்து அவர்களுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. சஞ்சய் தத் தனது பாஸ்போர்ட்டை மும்பை தடா கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications