அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் பெண்னை அரிவாளால் வெட்டிய மற்றொரு பெண் கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி அருகே கூசாலிபட்டியை சேர்ந்த கண்ணன் மனைவி அமராவதி. இவரும் வடக்கு முத்துலாபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகள் கண்ணம்மாள் என்பவரும் கூசாலிப்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் ஒன்றாக வேலை பார்த்து வருகின்றனர்.
கண்ணாம்மாளின் தங்கை பழனிக்கு அரசு மருத்துமனையில் குழந்தை பிறந்தது. அதைப் பார்க்க கண்ணம்மாள் மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அங்கு வந்த அமராவதி கையில் மறைந்து வைத்திருந்த அரிவாளால் கண்ணம்மாளின் பின்னந் தலையிலும் இடது காலிலும் வெட்டினார். இதில் கண்ணம்மாள் பலத்த காயம் அடைந்தார்.
தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் அமராவதியை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் அமராவதியின் கணவர் கண்ணனிடம், அமராவதிக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக கண்ணம்மாள் கூறினாராம்.
இதனால் கண்ணன் சந்தேமடைந்து அமராவதியை அடித்து சித்ரவதை செய்தாராம். இதனால் கோபமடைந்த அமராவதி கண்ணம்மாளை வெட்டியதாக தெரிய வந்தது.
காயமடைந்த கண்ணம்மாள் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications