யுனானி மருத்துவக் கல்லூரி பிரச்சனை- அரசு தலையிட விஜயகாந்த் கோரிக்கை
சென்னை: சென்னை யுனானி மருத்துவக் கல்லூரி பிரச்சனையை தமிழக அரசு தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை யுனானி மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் அந்த கல்லூரி பொறுப்பாளரை மாற்றக் கோரி கடந்த 14ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அந்த பொறுப்பாளர் ஏற்கனவே கடந்த 2004ம் ஆண்டிலிருந்து இதே கல்லூரியில் துணை முதல்வராக இருந்தபோது புகார்களுக்கு ஆளாகி மாற்றப்பட்டவர் என தெரிகிறது.
மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய முதல்வர், நிர்வாகத் திறமையின்மை மற்றும் அராஜக போக்குடன் கல்லூரியை சீர்குலைப்பதாக மாணவர்கள் குமுறுகின்றனர்.
சிறுபான்மை சமுதாயத்திற்காக பாடுபடுவதாக கூறும் அரசு அவர்களுக்கென உள்ள ஒரே கல்லூரியை சீர்குலைக்க முயல்வதா என்பதே என் கேள்வி. கல்லூரி முதல்வர்கள் நிர்வாகத் திறமையும் இருக்க வேண்டுமென்று தமிழக கல்வி அமைச்சர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் கல்லூரி நிர்வாகத்திற்கு தகுந்தவரல்ல என்று மாற்றப்பட்ட ஒருவரை மீண்டும் வேண்டுமென்றே அதே இடத்தில் நியமித்தது மட்டுமல்லாமல் பதவி உயர்வும் தந்திருப்பது, குதிரை கீழே தள்ளியது மட்டுமல்லாமல் குழி பறிக்கும் கதையாக உள்ளது.
எனவே இந்தப் பிரச்சனையில் உடனே தமிழக அரசு தலையிட்டு யுனானி கல்லூரியை காப்பாற்ற வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications