ஹைதராபாத்தில் அன்புமணி கொடும்பாவி எரிப்பு
ஹைதராபாத்: மருத்துவப் படிப்பை ஆறரை ஆண்டுகளாக உயர்த்தத் திட்டமிட்டுள்ள மத்திய சுகாதாரத் துறையைக் கண்டித்து, அத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸின் கொடும்பாவியை எரித்து ஹைதராபாத்தில் இளநிலை டாக்டர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரி முன்பு இச்சங்கத்தைச் சேர்ந்த டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கூடி அன்புமணியைக் கண்டித்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின்னர் அன்புமணியின் கொடும்பாவியை அவர்கள் தீவைத்து எரித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் கூறுகையில், கிராமங்களில் போய் சேவை செய்ய வேண்டும் என்பது நல்ல விஷயம்தான். நாங்கள் அதை ஏற்கவில்லை.
ஆனால் படிப்புக் காலத்தை அரசு ஆறரை ஆண்டுகளாக நீட்டிக்கக் கூடாது. இதன் மூலம் கிராமங்களில் சேவை செய்ய வேண்டும் என்பதை கட்டாயப்படுத்த அரசு முயலுகிறது. இதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
தற்போதுள்ள ஐந்தரை ஆண்டு கால படிப்பிலேயே கிராமப்புற சேவையை அரசு சேர்க்கலாம். ஆனால் அரசின் புதிய திட்டத்தை நாங்கள் ஏற்க மாட்டோம்.
படிப்புக் காலத்தை ஆறரை ஆண்டுகளாக நீட்டித்தால் இளநிலை டாக்டர்களால் முது நிலைப் படிப்புகளை படிக்கவே முடியாமல் போய் விடும். மேலும் வசதியற்ற மாணவர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகி விடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications