சஞ்சய் தத் விடுதலையானார்-கூலி ரூ. 38.25!

டெல்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து இன்று காலை சிறையிலிருந்து விடுதலையானார்.
சிறையில் அவர் பார்த்த தச்சு வேலைக்குக் கூலியாக 38 ரூபாயும், 25 காசுகளும் கிடைத்துள்ளன.
1993ம் ஆண்டு மும்பையை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில், முழுமையான ஜாமீன் கோரி சஞ்சய் தத் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 27ம் தேதி சஞ்சய் தத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்த ஜாமீன் உத்தரவு நகல் எரவாடா சிறை அதிகாரிகளுக்கு இன்று கிடைத்தது. இதனை தொடர்ந்து சஞ்சய் தத் மற்றும் அவரது நண்பர் யூசுப் நல்வாலா ஆகியோர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர்.
சிறையிலிருந்து விடுதலையான சஞ்சய் தத் மதியம் 12 மணிக்கு புனே விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டு சென்றார்.
'முன்னாபாய்க்கு' கூலி ரூ. 38.25!:
37 நாள் சிறைவாசம் அனுபவித்த சஞ்சய் தத்துக்கு, சிறையில் அவர் பார்த்த தச்சு வேலைக்குக் கூலியாக 38 ரூபாயும், 25 காசுகளும் கிடைத்துள்ளன.
சிறையில், தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு கைதி உடை வழங்கப்படும். அவர்களுக்கு ஒரு வேலையும் தரப்படும். அந்த வகையில், சஞ்சய் தத் தச்சு வேலையைத் தேர்ந்தெடுத்தார்.
சிறையில் இருந்த கடந்த 37 நாட்களும் அவர் தச்சு வேலை பார்த்து வந்தார். இதற்கான சம்பளம் தற்போது அவருக்குக் கிடைத்துள்ளது. அதாவது கடந்த 37 நாட்களாக அவர் பார்த்த வேலைக்காக 38 ரூபாயும், 25 காசுகளும் கூலியாக கிடைத்துள்ளன.
சிறையில் இருந்த நாட்களில் மூங்கில் கூடைகளை பின்னுவது உள்ளிட்ட வேலைகளை அவர் பார்த்துள்ளார். சஞ்சய் தத், அன் ஸ்கில்ட் ஒர்க்கர் என்ற பட்டியலின் கீழ் இந்த வேலையைச் செய்தார்.
பாலிவுட்டில் சஞ்சய் தத்தை வைத்து ரூ. 200 கோடி முதலீட்டில் பல படங்கள் முடங்கிப் போயுள்ளன. இந்த நிலையில், சிறையில் வேலை பார்த்த வகையில் அவருக்கு 38 ரூபாய் சம்பளம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சிறையில் இருந்த காலத்தில் தினசரி காலை எழுந்து, குளித்து நெற்றியில் திலகமிட்டுக் கொண்டு, பூஜை செய்து பின்னர் தனது வேலையைப் பார்க்கச் செல்வாராம் தத்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications