சென்னை துறைமுக கன்டெய்னர் லாரி ஸ்டிரைக் வாபஸ்
சென்னை: சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் நடத்திய ஸ்டிரைக் பேச்சு வார்த்தைக்கு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
சென்னை துறைமுகத்தில் தினந்தோறும் 2,500க்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள் ஏற்றி இறக்கப்படுகின்றன. ஆனால் இந்த கன்டெய்னர்களை லாரிகளில் ஏற்றவும், இறக்கவும் போதிய கிரேன்கள் துறைமுகத்தில் இல்லாததால் பல மணிநேரம் லாரிகள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதனால் தங்களுக்கு ஆயிரக்கணக்கில் வருமானம் இழப்பு ஏற்படுவதாக கூறி கன்டெய்னர் லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் திடீரென்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
இந்த திடீர் ஸ்டிரைக்கால் நேற்று துறைமுகத்தில் எந்த சரக்குகளும் வெளியே செல்லவும் இல்லை. துறைமுகத்திற்கு வந்த சரக்குகள் இறக்கப்படவும் இல்லை. இதனால் நேற்று முன்தினம் சிங்கப்பூர், கொழும்பு மற்றும் ஷாங்காய் நாடுகளிலிருந்து வந்த 3 சரக்கு கப்பல்களிலிருந்து வந்த சரக்குகள் இறக்கி வைக்கப்பட்டாலும் லாரிகளில் ஏற்றப்படாமல் இருந்ததால் சுமார் 5,000 கன்டெய்னர்கள் தேங்கின.
இதனால் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவிருந்த சரக்குகளும் தேங்கியது. கன்டெய்னர் லாரி டிரைவர்கள், கிளீனர்கள் வேலை நிறுத்தத்தால் சென்னை துறைமுகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் சுமார 80,000 டன் சரக்கு தேங்கியது.
இதனை சமாளிக்க துறைமுக துணைத் தலைவர் ராவ் தலைமையில் நேற்றிரவு நடந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது கன்டெய்னர்களை லாரியில் ஏற்றி இறக்க கிரேன் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று துறைமுக துணைத் தலைவரிடம் தொழிற்சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர். இவர்களின் கோரிக்கையை துறைமுக நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.
இதனையடுத்து நேற்றிரவு உடனடியாக கன்டெய்னர் டிரைவர்கள், கிளீனர்கள் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டு லாரிகள் ஓடத் தொடங்கின.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications