மனைவி சித்திரவதை: கள்ளக் காதலியுடன் கணவர் கைது
கரூர்: மனைவியை வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்த இளைஞர், அவரது தாயார், சகோதரி மற்றும் கள்ளக் காதலியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கரூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஆதிரைச் செல்வன் (27). இவரது மனைவி மலர்விழி. ஆதிரைச் செல்வனுக்கும் சரஸ்வதி என்ற பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இதையடுத்து மனைவியைப் புறக்கணிக்க ஆரம்பித்தார். மேலும், கூடுதல் வரதட்சணை கேட்டும் மலர்விழியைக் கொடுமைப்படுத்தி, சித்திரவதை செய்து வந்தார்.
ஆதிரைச் செல்வனின் செயலுக்கு அவரது தாயார் சிந்தாமணி, தங்கை மீராதேவி ஆகியோரும் உடந்தையாக இருந்தனர்.
வரதட்சணைக் கொடுமையாலும், கணவர் கள்ளக் காதலியுடன் கொட்டம் அடித்து வந்ததையும் தாங்கிக் கொள்ள முடியாத சரஸ்வதி, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து நடவடிக்கையில் இறங்கிய போலீஸார், ஆதிரைச் செல்வன், சிந்தாமணி, மீராதேவி, சரஸ்வதி ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications