நண்பருடன் ஓடிய மனைவியை கணவர் ஏற்க மறுப்பு: கள்ளக் காதலன் தலைமறைவு
சேரன்மகாதேவி: நண்பருடன் ஓடிய மனைவியை ஏற்க கணவர் மறுத்ததாலும், அவரை அழைத்து சென்ற கள்ளக் காதலனும் தலைமறைவாகி விட்டதாலும் அந்த பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
திருநெல்வேலி பத்தமடையைச் சேரேந்த தங்கபாண்டியும் ரமேசும் நண்பர்கள். இதனால் ரமேஷ் அடிக்கடி தங்கபாண்டி வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது தங்கபாண்டி மனைவி கல்பனாவுடன் ரமேசுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
தங்கப்பாண்டி இல்லாத நேரத்தில் கல்பனாவுடன் ரமேஷ் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் கல்பனா கடந்த 10 தினங்களுக்கு முன்னர் ரமேசுடன் ஓடிவிட்டார்.
இதுகுறித்து போலீசில் தங்கபாண்டி புகார் செய்தார். இந் நிலையில் மதுரை ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கல்பனாவை போலீசார் மீட்டனர். ஆனால் அவருடன் இருந்த ரமேஷ் தலைமறைவாகி விட்டார்.
பத்தமடைக்கு அழைத்து வரப்பட்ட கல்பனாவை விசாரணைக்கு பின்னர் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்திற்கு வந்திருந்த கல்பனாவின் கணவர் தங்கபாண்டி தன்னுடன் மனைவியை அழைத்து செல்ல மறுத்துவிட்டார்.
இதனால் கணவனாலும், கள்ளக் காதலனாலும் கைவிடப்பட்ட கல்பனாவை மதுரையில் உள்ள மகளிர் காப்பகத்தில் தங்கவைக்கும்படி நீதிபதி ரவி உத்தரவிட்டார்.
கல்பனாவை அழைத்து சென்ற ரமேஷ் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications