சிறுதாவூர் பங்களாவில் ஜெ. ஓய்வு
மாமல்லபுரம்: அதிமுக பொதுச் செயலாளர் தனது சிறுதாவூர் பங்களாவில் ஓய்வுக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஷிப்ட் முறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அவ்வப்போது ஜெயலலிதா சிறுதாவூரில் உள்ள பங்களாவுக்கு தனது தோழி சசிகலாவுடன் ஓய்வெடுக்கச் செல்வார். அதே போல் நேற்றிரவு சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து தனது சொந்த காரில் புறப்பட்டு சென்றார்.
ஜெயலலிதா காரின் முன்னும் பின்னும் பாதுகாப்புக்காக போலீசார் சென்றனர். சிறுதாவூர் பங்களாவில் தங்கியிருக்கும் ஜெயலலிதா வரும் ஜனவரி மாதம் வரை அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.
சமீப காலமாக அவரது போயஸ் தோட்ட வீட்டுக்கு பல்வேறு மர்ம நபர்கள் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
தற்போது சிறுதாவூருக்குச் சென்றிருக்கும் ஜெயலலிதாவுக்கு, அங்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பங்களாவைச் சுற்றிலும் போலீசார் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
ஜெயலலிதா சிறுதாவூரில் தங்கியிருக்கும் வரை காஞ்சீபுர மாவட்ட அதிரடிப்படை போலீசார் ஷிப்ட் முறையில் பாதுகாவலுக்கு இருப்பார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு அவருக்கு குண்டு துளைக்காத காரை கொடுத்திருந்தாலும் அவர் அதை பயன்படுத்தாமல் சொந்த காரிலேயே சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications