கணவர் குடும்பத்தாரை தூக்கில் போட வேண்டும்-ஜெனிதா

திருச்சியை சேர்ந்த ஜெனிட்டாவை அமெரிக்காவில் இன்போஸிஸ் நிறுவனத்தில் பணியாற்றும் அவருடைய கணவர் கிரிஸ்டி சேவியர் டேனியஸ் மற்றும் குடும்பத்தினர் காரில் இருந்து தள்ளி கொல்ல முயன்றதாக புகார் கூறப்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்து அமெரிக்காவில் இலினாய்ஸ் மாகாணத்தில் உள்ள லேக் பாரஸ்ட் மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஜெனிதாவை அவரது பெற்றோர் சென்று சென்னை அழைத்து வந்துள்ளனர்.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் நினைவு திரும்பிய ஜெனிதாவை அவருடைய பெற்றோர்கள் திருச்சிக்கு அழைத்து வந்து தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது ஓரளவு உடல்நிலை தேறியுள்ள ஜெனிதா நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டில் இருந்தபடியே பிசியோதெரபி சிகிச்சைகள் மேற்கொள்ளுமாறு டாக்டர்கள் கூறியுள்ளனர்.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்கு முன்னர் ஜெனிதா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திருமணம் நடந்ததில் இருந்தே கணவன் குடும்பத்தினர் என்னை கொடுமைப்படுத்தினார்கள். ஆனால் நான் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டேன். பிரச்சனைகளை சமாளித்து விடலாம் என்ற எண்ணத்தில் தான் எனது கணவர் குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றேன்.
அமெரிக்காவில் கிரீன்வீல்ஸ் என்ற இடத்தில் காரில் செல்லும் போது எனது மாமியார் செல்லம், மாமனார் சேவியர் ஆகியோர் பின் சீட்டில் அமர்ந்திருந்தனர். எனது கணவர் தான் காரை ஓட்டி வந்தார்.
காரில் ஏறியதிலிருந்தே என்னிடம் சண்டை போட்டுக் கொண்டு வந்த மாமியார் செல்லம், நான் எதிர்பார்க்காத போது திடீரென்று கார் கதவை திறந்து கீழே தள்ளிவிட்டார்.
அதன்பின்னர் 2 மாதங்கள் கழித்து தான் எனக்கு நினைவு திரும்பியுள்ளது. என்னுடைய பெற்றோரின் துணையாலும், கடவுளின் அருளாலும் தான் நான் மீண்டும் உயிர் பிழைத்துள்ளேன்.
என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய கணவன் குடும்பத்தாரை கடுமையாக தண்டித்து அவர்களை தூக்கில் போட வேண்டும் என்றார் ஜெனிதா.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications