உபி குண்டுவெடிப்பை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் ஸ்டிரைக்
சென்னை: உத்தரப்பிரதேசத்தில் நீதிமன்றத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 23ம் தேதி பைசாபாத், லக்னெள மற்றும் வாரணாசியில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் பைசாபாத், லக்னெள ஆகிய இடங்களில் நீதிமன்ற வளாகங்களுக்குள் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதில் 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
நீதிமன்றங்களில் நடத்தப்பட்ட இந்த குண்டுவெடிப்பைக் கண்டித்து நாளை வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு பார் கவுன்சில் சங்கத் தலைவர் சந்திரமோகன் கூறியதாவது,
வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நாளை தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றார்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் பால் கனகராஜ், இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
நாளை நடக்கவுள்ள வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் நீதிமன்ற பணிகள் வெகுவாக பாதிக்கும் எனத் தெரிகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications