குறை சொல்லி ராமதாஸ்-அமைச்சர் தாக்கு
சென்னை: பொழுது விடிந்து விட்டால் பாமக நிறுவனர் ராமதாசுக்கு யாரைப் பற்றியாவது குறை கூறாவிட்டால் தூக்கம் வராது போலிருக்கிறது என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சிதம்பரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டம் பற்றி பேசியிருக்கிறார். அப்போது தமிழகத்தை ஆளுகிறவர்களும், ஆண்டவர்களும் ஒன்றாக கூட்டு சேர்ந்துள்ளனர் என்று பேசியிருக்கிறார்.
ராமதாசுக்கு அன்றாடம் பொழுது விடிந்தால் யாரைப் பற்றியாவது குறை கூறாவிட்டால் தூக்கம் வராது போலிருக்கிறது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது, அந்தப் பிரச்சனையில் சுமூக முடிவெடுக்க மாணவர்களை முதல்வர் கருணாநிதி சந்தித்து பேசினார்.
அப்போது மத்திய அமைச்சருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதுவதாகவும், உண்ணாவிரதத்தை மாணவர்கள் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மாணவர்களின் போராட்டத்தை நிறுத்த முதல்வர் வழிவகுத்தாரே தவிர அந்த மாணவர்களை தூண்டிவிடவில்லை. மாணவர்கள் எழுப்பிய கோரிக்கை குறித்து தான் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதுவதாக முதல்வர் தெரிவித்தார்.
மேலும், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஏதோ கையெழுத்து போட்டு கொடுத்ததாகவும் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். அப்படி நானோ அல்லது எனக்கு முன்பிருந்த சாத்தூர் ராமச்சந்திரனோ எந்தக் கையெழுத்தும் போட்டுக் கொடுக்கவில்லை.
ஆனால் இந்த திட்டத்தை எதிர்க்க ஆளுகிறவர்களும், ஆண்டவர்களும் கூட்டு சேர்ந்திருப்பதாக ராமதாஸ் பேசியிருப்பது வேண்டுமென்றே திட்டமிட்டு கூறும் கற்பனை என்று கூறியுள்ளார் பன்னீர்செல்வம்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications