கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் கடைகளுக்கு சீல்
ஆறுமுகநேரி: ஆறுமுகநேரியில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு பறக்கும் படை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி சீல் வைத்தனர்.
ஆறுமுகநேரி பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளில் நடக்கும் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக உயரதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து ஆறுமுகநேரி மெயின் பஜாரில் உள்ள 3 டாஸ்மாக் மதுக்கடைகளில் பறக்கும் படை அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தினர்.
அப்போது கடைகளில் உள்ள பார்களில் கட்டிங் மற்றும் கூடுதல் விலைக்கு பீர் விற்பனை செய்வதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த 3 கடைகளையும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சீல் வைக்கப்பட்ட கடைகளில் தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தலைமையில் அதிகாரிகள் நேற்று பிற்பகல் 12 மணி முதல் மாலை வரை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 3 மதுபான கடைகளிலும் இருப்பு பணத்தில் பற்றாக்குறை, போலி மதுவகை சரக்குகள் இருப்பதை கண்டு பிடித்தனர்.
இரவுக்குள் இருப்பு பணம், கணக்கு பதிவேடு மற்றும் சரக்கு கையிருப்பு முறையாக இல்லாவிட்டால் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் மேலாளர் எச்சரிக்கை விடுத்தார்.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications