பாமக பிரமுகர் மகனை அடித்த போலீஸ் - காவல் நிலையம் முற்றுகை
சென்னை: பாமக பிரமுகரின் மகனை போலீஸார் அடித்ததைக் கண்டித்து சென்னை கிண்டி காவல் நிலையத்தை பெரும் திரளான பாமகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் ேசர்ந்த ஒரு பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் இருவரது பெற்றோரும் இந்த காதலுக்கு வில்லனாக மாறினர்.
இதையடுத்து நண்பர்களின் துணையுடன், ரமேஷ் தனது காதலியுடன் வீட்டை விட்டு ஓடி விட்டார்.
இதையடுத்து அந்தப் பெண்ணின் தந்தை கிண்டி காவல் நிலையத்தில் தனது மகளை ரமேஷ் கடத்தி விட்டதாக புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். ரமேஷின் நண்பர்களில் ஒருவரான டாக்சி டிரைவர் லோகேஷ் என்பவரை பிடித்துச் சென்று அடித்து உதைத்ததாக தெரிகிறது.
லோகேஷ் பாமக கொள்கைப் பிரச்சார அணியின் செயலாளர் பஞ்சாட்சரத்தின் மகன் ஆவார். போலீஸாரின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பஞ்சாட்சரம், தனது கட்சித் தொண்டர்களோடு கிண்டி காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று முற்றுகைப் போராட்டத்தில் இறங்கினார்.
போலீஸாரைக் கண்டித்து அனைவரும் கூச்சலிட்டனர். பாமக துணைப் பொதுச் செயலாளர் சிவாீ, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தயாளன், கவுன்சிலர்கள் பிரேமா, வெங்கடேசன், மணிவண்ணன் ஆகியோர் காவல் நிலையம் முன்பு ஆவேசமாக கோஷமிட்டனர்.
தகவல் அறிந்துதம் சைதாப்பேட்டை உதவி ஆணையர் ஜெயராஜ் விரைந்து வந்து பாமகவினரை அமைதிப்படுத்தினார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். போலீஸாரால் தாக்கப்பட்ட லோகேஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications