மலேசிய தமிழ் தலைவர் மீண்டும் கைது
கோலாலம்பூர்: மலேசிய அரசின் பாரபட்சப் போக்கைக் கண்டித்து போர்க்கொடி உயர்த்தியுள்ள இந்து உரிமை நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான வி.கணபதி ராவ் இன்று கைது செய்யப்பட்டார்.
மலேசிய அரசு தங்களை 2ம் தர குடிமக்களாக நடத்துவதைக் கண்டித்தும், கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை தரக் கோரியும், இந்த நிலைக்குக் காரணமான இங்கிலாந்து அரசைக் கண்டித்தும் இங்கிலாந்து தூதரகத்தில் மனு கொடுக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான தமிழர்கள் தலைநகர் கோலாலம்பூரில் திரண்டனர்.
மலேசியா கடந்த 10 ஆண்டுகளில் காணாத அளவுக்கு பெரும் திரளாக கூடிய தமிழர்கள் மீது போலீஸார் மிகக் கடுமையாக நடந்து கொண்டனர்.
240 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஹிண்ட்ராப் அமைப்பின் முக்கியத் தலைவர்களான உதயகுமார், வாய்த மூர்த்தி, கணபதி ராவ் ஆகியோரும் அடக்கம்.
ஆனால் அவர்கள் மீதான குற்றச்சாட்டு சரியில்லை என்று கூறி 3 பேரையும் விடுதலை செய்ய கிளாங் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 3 பேரும் விடுதலையாகினர்.
இந்த நிலையில் கணபதி ராவை கோலாலம்பூர் போலீஸார் இன்று மீண்டும் கைது செய்துள்ளனர். அவரது அலுவலகத்தில் வைத்து ராவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே 88 தமிழர்கள் மீது மலேசிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றச்சாட்டையும் நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம். கணபதி ராவ் கைது செய்யப்பட்டுள்ளால் மலேசிய தமிழர்கள் மற்றும் இந்தியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications