பாகிஸ்தானின் அதிபராக முஷாரப் 2வது முறையாக பதவியேற்பு

பாகிஸ்தானில் கடந்த அக்டோபர் 8ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் முஷாரப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் முஷாரப் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
ஆனால் இந்த தீர்ப்பு வருவதற்குள் முஷாரப் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை கொண்டு வந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை மாற்றி தான் வெற்றி பெற்றது குறித்த தீர்ப்பை தனக்கு சாதகமாக அமையுமாறு செய்து கொண்டார்.
தொடர்ந்து அதிபர் பதவி மற்றும் ராணுவ தளபதி பதவி இரண்டையும் வகித்து வந்தார். இந்நிலையில் முஷாரப் ஒரு பதவியை மட்டும் தான் வகிக்க வேண்டும் என்று பாகிஸ்தானில் அவருக்கு எதிராக போராட்டங்கள் எழுந்தன.
இதையடுத்து முஷாரப் ராணுவ தளபதி பதவியை விட்டு விலக முடிவு செய்தார். அதன்படி நேற்று காலை தனது ராணுவ தளபதி பதவியிலிருந்து விலகிய முஷாரப், ஜெனரல் ரஷ்பக் பர்வேஸ் கியானியிடம் ராணுவ தளபதி பதவியை ஒப்படைத்தார்.
இைதயடுத்து முஷாரப் இன்று அதிபராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹமீத் டோகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பாகிஸ்தான் நாட்டின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள முஷாரப் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதிபராக நீடிப்பார்.
ராணுவத் தளபதி பதவியில்லாமல் வெறும் அதிபராக முஷாரப் பதவியேற்றுள்ள நிலையில் அவரை எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் ராணுவம் கவிழ்க்க வாய்ப்புள்ளது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications