விரைவில் ஓடும் ரயில்களில் ஏ.டி.எம். வசதி - வேலு
சென்னை: ரயில்களில் ஏ.டி.எம் வசதியை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இது அமலுக்கு வரும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு கூறியுள்ளார்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இ- டிக்கெட் வசதிக்கான ஏ.டி.எம். கருவியை வேலு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், இதுபோன்ற ஏடிஎம் சாதனங்கள் அனைத்து ரயில் நிலையங்களிலும் பொருத்தப்படும்.
அடுத்து, ஓடும் ரயில்களிலும் ஏடிஎம் வசதி செய்யப்படும். அதற்கு முன்பாக பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இருப்பினும் விரைவில் இது அமலுக்கு வரும்.
ரயில் நிலையங்களில் இ டிக்கெட் ஏடிஎம் வசதியை ஏற்படுத்துவது தொடர்பாக 7 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
வங்கிகள் தங்களது ஏடிஎம் அறைகளை நிர்மாணிக்க ரயில் நிலையங்களில் இடம் வழங்கப்படும். இந்த மையத்தில் இண்டர்நெட் இணைப்புடன் கூடிய ஒரு கம்ப்யூட்டர் டிக்கெட் சாதனம் வைக்கப்பட்டிருக்கும். நாடு முழுவதும் மொத்தம் 1392 இ டிக்கெட் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications