கருணாநிதியுடன் ஹிண்ட்ராப் தலைவர் சந்திப்பு
சென்னை: முதல்வர் கருணாநிதியை, இன்று மலேசிய தமிழர் உரிமைப் போராட்டக் குழுவின் தலைவர் வாய்த மூர்த்தி சந்தித்து தமிழர் பிரச்சினை குறித்து விவாதித்தார்.
மலேசியாவில் மலாய் இன மக்களுக்கு சமமாக தாங்களும் நடத்தப்பட வேண்டும் என்று மலேசிய தமிழர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதுதொடர்பான போராட்டத்தை ஒடுக்கி வருகிறது மலேசிய அரசு.
இந்து உரிமை நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) என்ற போராட்டக் குழு ஆரம்பிக்கப்பட்டு இக்குழுவினர் தீவிரப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று ஹிண்ட்ராப் தலைவர் வாய்தமூர்த்தி சென்னை வந்தார். கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியை அவர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, மலேசிய தமிழர்கள் பிரச்சினை குறித்து முதல்வரிடம் வாய்த மூர்த்தி விளக்கிக் கூறினார். தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாய்த மூர்த்தி, தமிழர்களின் பிரச்சினைகள், பட்டு வரும் இன்னல்கள் குறித்து முதல்வரிடம் தெளிவாக விளக்கினேன். எங்களது உணர்வுகளை அவர் புரிந்து கொண்டார். மலேசியத் தமிழர்களுக்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு என்று உறுதியளித்தார் என்றார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications