கோவில் நகைகளைத் திருடிய பூசாரி கைது
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில், கோவில் நகைகளை திருடிய பூசாரியை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அடுத்த பேயன்குழியில் முத்தாரம்மன் கோலில் உள்ளது. இந்த கோவிலில் ராஜன் (35) என்பவர் பூசாரியாக உள்ளார்.
இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த மற்றும் கோவில் வருமானத்தில் செய்த நகைகள் என சுமார் 25 பவுன் நகைகள் உள்ளது.
கோவில் நகைகளை பெட்டியில் பூட்டி வைக்கும் சாவியும், உண்டியல் சாவியும் பூசாரி ராஜனிடமே இருந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் கோவில் நிர்வாகத்தினர் உண்டியலை திறந்து பார்த்த போது பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தொகை மிக குறைவாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் பூசாரி ராஜனை அழைத்து விசாரித்தனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கோவில் நிர்வாகத்தினர் சாமி நகைகளை சரி பார்த்தனர். அப்போது ஒரிஜினல் நகைகளுக்கு பதில் கவரிங் நகைகள் இருந்தது கண்டு நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், பூசாரி தலைமறைவு ஆகிவிட்டார். இது குறித்து ஊர் தலைவர் மற்றும் முக்கியஸ்தர்கள் இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து பூசாரியையும், அவரது மனைவியையும் தேடி வந்தனர். இதில் பூசாரி சிக்கினார்.
அவரிடமிருந்து திருட்டுப் போன கோவில் நகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications