வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை- தமிழகத்தில் மழை தொடரும்
சென்னை: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் தமிழகத்தின் வடக்குப் பகுதிகளில் இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர் ரமணன் கூறியதாவது,
சென்னை-மசூலிபட்டினத்திற்கு இடையில் தமிழக-ஆந்திர கடற்கரையை ஒட்டி வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது.
தமிழகத்தை பொறுத்தவரை சில இடங்களில் மழை பதிவாகியுள்ளது. காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 40 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் நுங்கம்பாக்கம், விமான நிலையம், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், அரக்கோணம், சோழவரம், செங்குன்றம் ஆகிய இடங்களில் 10 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
வளி மண்டலத்தின் சுழற்சி காரணமாக மேலும் ஒரு நாள் தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். தமிழகத்தின் சென்னை உட்பட சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இந்த வருடம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் வழக்கத்தைவிட 12 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை இன்னும் முடியவில்லை என்றார் ரமணன்.
-
அடிச்சு பெய்யப்போகும் மழை.. பெரிய சம்பவம் இருக்கு! உஷாரா இருங்க மக்களே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள்












Click it and Unblock the Notifications