உண்ணாவிரதம் இருந்த 5 வேளாண் மாணவ, மாணவிகள் மயக்கம்
கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோவை மாணவ, மாணவியர் 5 பேர் நேற்று மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வேளாண்மைத் துறையில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வேளாண் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்கு வழி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 நாட்களாக வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள், வனக் கல்லூரி, தோட்டக் கலைக் கல்லூரி ஆகியவற்றின் மாணவ, மாணவியர் காலவரையற்றப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவ, மாணவியருக்கும், வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மாணவ, மாணவியர் இறங்கியுள்ளனர். இதையடுத்து கல்லூரிகள், விடுதிகள் மூடப்பட்டு விட்டன.
கோவை வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். கொட்டும், மழை, பனியைப் பொருட்படுத்தாமல், மாணவ, மாணவியர் வெட்ட வெளியில் மரத்தடிகளில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசின் போக்கால் தாங்கள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்த காயத்ரி, கோதை, மதி, சுகுந்தன், பிரபு ஆகிய மாணவ, மாணவியர் மயங்கி விழுந்தனர். இதையடுத்து உடனடியாக அவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
கோவையைப் போல, மதுரை வேளாண்மைக் கல்லூரி, திருச்சி வேளாண்மைக் கல்லூரி, கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரி, குமுளூர் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி, பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரி, மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி ஆகிய இடங்களிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications