தமிழர்களை சட்டப்படி நடத்த வேண்டும்: மலேசியாவுக்கு யு.எஸ்.அறிவுரை
வாஷிங்டன்: மலேசிய போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தலைவர்களை மலேசிய அரசு சட்டப்படியும், அவர்களது உரிமைகள் கெடாதபடியும் நடத்த வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.
மலேசியாவில் சம உரிமை கோரி போராட்டம் நடத்தி வரும் தமிழர்கள் மீது மலேசிய அரசு எடுத்து வரும் அடக்குமுறை நடவடிக்கைகளை சமீபத்தில் அமெரிக்கா கண்டித்திருந்தது. மனித உரிமைகள் மீறப்படுவது கவலை தருவதாக அது கூறியிருந்தது.
இந்த நிலையில் ஹிண்ட்ராப் அமைப்பின் சட்ட ஆலோசகர் உதயக்குமார் உள்ளிட்ட 5 தமிழ் தலைவர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்கா மீண்டும் கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சீன் மெக்கார்மாக் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களை, மலேசிய அரசு அந்நாட்டுச் சட்டப்படி நடத்த வேண்டும். அவர்களுக்குரிய உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்று அமெரிக்கா விரும்புகிறது.
விசாரணையை விரைவாகவும், வெளிப்படையாகவும் மலேசிய அரசு நடத்த வேண்டும்.
அமைதியான முறையில், தங்களது கருத்தை வெளிப்படுத்த விரும்பும் அரசியல் அமைப்புகள் மீதோ, தனிப்பட்ட அமைப்புகள் மீதோ, குடிமக்கள் மீதோ அடக்குமுறையைக் கையாளக் கூடாது என்ற கருத்தில் அமெரிக்கா உறுதியாக உள்ளது என்றார் அவர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications